குருஜியை கொத்தாக தூக்கிய போலீஸ்.. போலி முனைவராம்..! - My V3 Ads

எழுத்தின் அளவு: அ+ அ-

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் படித்திருப்பதாக போலி சான்றிதழைக் காட்டி மாத்திரைகள் தயாரித்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட விஜயராகவன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டார்.
கோவையைத் தலைமையிடமாகக் கொண்ட மை வி3 ஆட்ஸ்  Myv3 Ads நிறுவனத்துக்கு சித்த மருத்துவப் பொருட்கள் அனுப்புவது தொடர்பாக V3 சேனல் உரிமையாளர் விஜயராகவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் போலிச் சான்றிதழ் வைத்துக்கொண்டு மருந்து தயாரித்து வருவது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து மதுரையில் கைது செய்யப்பட்டு, கோவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.  தனக்‍கு உயர் ரத்த அழுத்தம், மற்றும் வெரிகோஸ் பிரச்சினைகள் இருப்பதாக தெரிவித்ததால் விஜயராகவன் 3வது முறையாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Night
Day