க்ரைம்
50 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - பரபரப்பு
50 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - பரபரப்புஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உள...
தமிழக - கேரளா எல்லைப்பகுதியில் தமிழக போலீசாரின் வாகன சோதனையில் 315 கிராம் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. தென்காசி மாவட்டம் புளியரை வாகன சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது கேரளா நோக்கி சென்ற தமிழக அரசு பேருந்தில் கேரள பயணி ஒருவரின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது, உரிய ஆவணங்கள் இன்றி அவர் சுமார் 315 கிராம் தங்க கட்டிகளை எடுத்து வந்தது தெரியவந்தது. தொடர்ந்து, அவரிடம் நடத்திய விசாரணையில், கடையநல்லூர் பகுதியில் இருந்து தங்க கட்டிகளை மலப்புரம் பகுதியில் உள்ள ஒரு நகைக்கடைக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதனையடுத்து, தங்க் கட்டிகளை பறிமுதல் செய்த போலீசார், உரிய ஆவணங்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்து தங்கத்தை பெற்று செல்லுமாறு தெரிவித்துள்ளனர்.
50 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - பரபரப்புஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உள...
விளம்பர திமுக அரசை கண்டித்து ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் பெண்...