இந்தியா
இந்திய அரசியலமைப்பு தின கொண்டாட்டம்
அரசியலமைப்பு சட்ட தினத்தையொட்டி, மலையாளம், மராத்தி, தெலுங்கு உள்ளிட்ட ஒன்?...
டெல்லியில் இளைஞர் ஒருவரின் வயிற்றில் இருந்து 39 நாணயங்கள், 37 காந்தங்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். துத்தநாகம் உடலை வலுப்படுத்தும் என கருதிய அந்த இளைஞர் 1 ரூபாய், 2 ரூபாய் மற்றும் 5 ரூபாய் என 39 நாணயங்கள் மற்றும் பல்வேறு வடிவங்களிலான 37 காந்தங்களையும் விழுங்கியுள்ளார். கடந்த 20 நாள்களுக்கு முன் இவற்றை விழுங்கிய நிலையில், நாளடைவில் வாந்தி எடுக்க ஆரம்பித்து, சாப்பிடவே முடியாமல் இளைஞர் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட இளைஞரின் வயிற்றை ஸ்கேன் செய்த மருத்துவர்கள் சிறு குடலில் 39 நாணயங்கள், 37 காந்தங்கள் இருப்பதை கண்டறிந்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த இளைருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் சிறுகுடலில் இருந்த நாணயங்கள், காந்தங்களை அகற்றி அவரது உயிரை காப்பாற்றினர்.
அரசியலமைப்பு சட்ட தினத்தையொட்டி, மலையாளம், மராத்தி, தெலுங்கு உள்ளிட்ட ஒன்?...
அரசியலமைப்பு சட்ட தினத்தையொட்டி, மலையாளம், மராத்தி, தெலுங்கு உள்ளிட்ட ஒன்?...