இந்தியா
இந்திய அரசியலமைப்பு தின கொண்டாட்டம்
அரசியலமைப்பு சட்ட தினத்தையொட்டி, மலையாளம், மராத்தி, தெலுங்கு உள்ளிட்ட ஒன்?...
கடலோர காவல்படையில் பெண்களை மத்திய அரசு சேர்க்கவில்லை என்றால் நாங்கள் உத்தரவிட நேரிடும் என உச்சநீதிமன்றம் காட்டமாக கூறியுள்ளது. பிரியங்கா திரிவேதி என்ற கடற்படை பெண் அதிகாரி உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பினார். கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில் ஆணாதிக்க சிந்தனை என உச்சநீதிமன்றம் கண்டித்த சூழலில், ராணுவ கடற்படையில் பெண்கள் பணியாற்றி வரும் நிலையில், ஏன் கடலோர காவல் படையில் பெண்கள் நியமிக்கப்படக்கூடாது என நேற்றைய விசாரணையில் கேள்வி எழுப்பியது. எல்லையை பெண்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் நிலையில் ஏன் கடலோர காவல் பணிகளில் அவர்கள் ஈடுபட முடியாது என தலைமை நீதிபதி சந்திரசூட் கேள்வி எழுப்பினார். இவ்விவகாரத்தில் மத்திய அரசு உரிய முடிவு எடுக்காவிட்டால், தாங்கள் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் காட்டமாக கூறினார்.
அரசியலமைப்பு சட்ட தினத்தையொட்டி, மலையாளம், மராத்தி, தெலுங்கு உள்ளிட்ட ஒன்?...
அரசியலமைப்பு சட்ட தினத்தையொட்டி, மலையாளம், மராத்தி, தெலுங்கு உள்ளிட்ட ஒன்?...