க்ரைம்
தொழிலதிபர் வீட்டில் 140 சவரன் கொள்ளை
செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள்கோவில் பகுதியில் தொழிலதிபர் வீட்டில் 14...
சேலம் அருகே மதுபோதையில் பெற்றோரை கட்டையால் சரமாரியாக தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர். காவேரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த கந்தசாமி - பாக்கியம் தம்பதினருக்கு சக்திவேல் என்ற மகன் உள்ளார். மதுபழக்கத்திற்கு அடிமையான சக்திவேல், தினந்தோறும் குடித்துவிட்டு பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மது அருந்துவதற்கு பணம் இல்லாததால், தனது பெற்றோரிடம் சொத்தை விற்று பணம் தருமாறு சக்திவேல் மீண்டும் தகாறில் ஈடுபட்டுள்ளார். இதற்கு, கந்தசாமியும், பாக்கியமும் மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரம் அடைந்த சக்திவேல் இருவரையும் கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள்கோவில் பகுதியில் தொழிலதிபர் வீட்டில் 14...
அனைவரும் ஒன்றிணைந்தால் அஇஅதிமுக வெற்றிப்பாதையில் செல்லும் - மூத்த பத்திர...