எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் வெட்டு காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மரத்தில் தொங்கி இருந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளங்காடுபக்கம் தர்காஸ் மல்லி மாநகர் கால்பந்து விளையாட்டு மைதானத்தில் மது விருந்து நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த மது விருந்தில் ஈடுபட்ட இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் அட்ராசிட்டியில் ஈடுபட்டனர். இந்நிலையில், காலையில் கால்பந்து விளையாட வந்தவர்கள் மைதானத்தில் வெட்டு காயங்களுடன் முள்முட்புதரில் இளைஞர் தூக்கிட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக அவர்கள் போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று போலீசார் இளைஞரின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில், பெரியபாளையம் அடுத்த நெய்வேலி பகுதியைச் சேர்ந்த 19 வயதான இளைஞர் என்பதும், மது விருந்தில் ஏற்பட்ட தகராறில், இளைஞரை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து இருக்கலாம் என்பது தெரியவந்தது.