செங்கல்பட்டு அருகே நாட்டு வெடிகுண்டுகளை வீசி திமுக செயலாளர் வெட்டி படுகொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி திமுக செயலாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் திமுக செயலாளராக ஆராமுதன் என்பவர் பதவி வகித்து வந்தார். இவர், வண்டலூர் மேம்பாலம் கீழ்பகுதியில் கட்சி அலுவலகம் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், ஆராமுதன் அங்கு புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்தை பார்வையிடுவதற்காக தனது காரில் சென்றுள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த மர்மநபர்கள் சிலர் ஆராமுதனின் கார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியதோடு, அவரை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த அவர் சென்னை குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவமனை முன்பு ஆரமுதனின் உறவினர்கள் மற்றும் ஏராளமான திமுகவினர் குவிந்துள்ளதால் அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Night
Day