சிவசேனா உத்தவ் பிரிவு தலைவரின் மகன் சுட்டுக் கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மும்பையில் முகநூல் நேரலையின்போது உத்தவ் தாக்கரே கட்சி தலைவரின் மகன் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

மும்பையில் உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. வினோத் கோசல்கர் என்பவரின் மகன் அபிஷேக், நேற்று தகிசார் பகுதியில் உள்ள ஒரு அலுவலகத்தில் 'பேஸ்புக்' நேரலை விவாதத்தில், சமூக ஆர்வலரான மோரிஸ் என்பவருடன் கலந்துகொண்டார். நேரலை முடிந்து அவர் புறப்பட்ட சமயத்தில் மோரிஸ் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அபிஷேக்கை சரமாரியாக சுட்டுள்ளார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து மோரிசும் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day