க்ரைம்
சொத்து பிரச்சனை: ஆயுதங்களுடன் தாக்கிய 7 பேர் கைது
மதுரை சோலை அழகுபுரம் அருகே சொத்து பிரச்சனை காரணமாக முதியவர் பாண்டி மற்று?...
கோவை அருகே வீட்டில் தனியாக இருந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையை கத்தியை காட்டி மிரட்டி, மர்மநபர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குரும்பபாளையம் ஆசிரியர் காலனியை சேர்ந்த 70 வயதான விஜயலட்சுமி, திருமணம் செய்துகொள்ளாமல் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், நேற்றிரவு 8 மணியளவில் அவரது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள், விஜயலெட்சுமியிடம் கத்தியை காட்டி மிரட்டி கட்டிவைத்துள்ளனர். மேலும் அவர் அணிந்திருந்த சுமார் 10 பவுன் நகைகளை பறித்துகொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதனையடுத்து கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
மதுரை சோலை அழகுபுரம் அருகே சொத்து பிரச்சனை காரணமாக முதியவர் பாண்டி மற்று?...
வடமாநில கேட் கீப்பர்களால் மொழிப் பிரச்சினை ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச?...