வீராணம் ஏரி தண்ணீரின்றி வறண்டு இருப்பதால் விவசாயிகள், பொதுமக்‍கள் வேதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வரலாற்று சிறப்பு மிக்‍க கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வீராணம் ஏரி, தற்போது தண்ணீரின்றி வறண்டு கிரிக்‍கெட் விளையாடும் மைதானமாக மாறியுள்ள அவலநிலை ஏற்பட்டுள்ளது. வீராணம் ஏரியில் இருந்து ஐம்பதாயிரம் ஏக்கருக்கு மேல் நேரடியாகவும் ஒரு லட்சம் ஏக்கருக்கு மறைமுகமாகவும் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வந்ததுடன், குடிநீர் ஆதாரமாகவும் விளங்கியது. 47 புள்ளி ஐந்து பூஜ்ஜியம் அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரி தற்போது தண்ணீரின்றி வறண்டு கட்டாந்தரையாக மாறியுள்ளதால் விவசாயிகளும், பொதுமக்‍களும் பெரும் வேதனை அடைந்துள்ளனர். சமூக விரோதிகள் இதனை ஆக்‍கிரமிப்பதற்குள் ஏரியை தூர்வார வேண்டும் என அவர்கள் கோரிக்‍கை விடுத்துள்ளனர். தற்போது, வீராணம் ஏரியில் இளைஞர்கள் கிரிக்‍கெட் விளையாடும் காட்சி வைரலாகி வருகிறது.

varient
Night
Day