கனமழை : திருத்துறைப்பூண்டியில் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்த சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக கனமழை பெய்தது. திருத்துறைப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மேலமருதூர், எழிலூர், பிச்சன்கோட்டகம் உள்ளிட்ட கிராமங்களில் நடவு செய்து 20 நாட்களே ஆன சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் சுமார் 2000 ஏக்கருக்கு மேல் தண்ணீரில் மூழ்கியது. ஆறுகள் மற்றும் வடிகால் வாய்க்கால்களில் ஆகாயதாமரை மண்டி இருப்பதால் தண்ணீர் வடியாமல் நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் விவசாயிகள் கடும் சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர். வயலில் தேங்கியுள்ள தண்ணீரை மோட்டர் மூலம் இறைத்து விவசாயிகள் அகற்றி வருகின்றனர். ஆறுகள் மற்றும் வடிகால் வாய்க்கால்களை முறையாக தூர்வாரி வயல்களில் மழைநீர் தேங்கமால் வடிய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Night
Day