எஸ்.ஐ.ஆர். பணி : 12 மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர்களுடன் மேலிடம் ஆலோசனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் டெல்லியில் காங்கிரஸ் கட்சி முக்கிய ஆலோசனை நடத்தியது.

தமிழகத்தில் கடந்த 4-ந் தேதியில் இருந்து எஸ்.ஐ.ஆர். என்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. எஸ்.ஐ.ஆர்.க்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், கோவா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், எஸ்.ஐ.ஆர். பணி நடந்து வரும் தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், கேரளா உள்பட 12 மாநிலங்களின் கட்சி நிர்வாகிகளுடன் டெல்லி இந்திரா பவனில் காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை நடத்தியது.  இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை, தமிழக தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். 

Night
Day