தாக்குதலை நியாயப்படுத்தி பேசிய டாக்டர் உமர்

எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி செங்கோட்டை அருகே பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய உமர் நபி தனது செயலை நியாயப்படுத்தி பேசிய வீடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லியில் கடந்த 10 ஆம் தேதி அல்பலா பல்கலைக் கழக மருத்துவர் உமர் முகமது நபி காரில் வெடிபொருள் வைத்து வெடிக்கச் செய்தார். இதில் 15 பேர் உயிரிழந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் என் ஐ ஏ இந்த தாக்குதலை தற்கொலைப் படைத் தாக்குதல் என அறிவித்தது.

இந்நிலையில்,இத்தகைய தாக்குதல்களை நியாயப்படுத்தி உமர் அலி பேசிய வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் தற்கொலைப் படைத் தாக்குதல்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ள உமர் அலி, இத்தகைய தாக்குதல்கள் தியாக நடவடிக்கை என்று தெரிவித்துள்ளார். இந்த தியாக நடவடிக்கை இஸ்லாம் மதத்தில் கூறப்பட்டுள்ளதாகவும் நியாயப்படுத்தியுள்ளார். உமர் நபியின் இந்த வீடியோ டெல்லி பயங்கரவாதத் தாக்குதல் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டதை உறுதிபடுத்தியுள்ளது.

Night
Day