டெல்லி கார் வெடிப்பு சம்பவம் : அமலாக்கத் துறை அதிரடி சோதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் கார் வெடிப்பு சம்பவத்தில் விசாரணையை தீவிரப்படுத்திய அமலாக்கத்துறை, அல் ஃபலா பல்கலைக் கழகத்துடன் தொடர்புடைய பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகிறது.

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவர் உமர் முகமது நபி கடந்த 10 ஆம் தேதியன்று டெல்லி செங்கோட்டை அருகே தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தினார். இதனையடுத்து இந்த பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய நபர்களை என் ஐ ஏ அதிகாரிகள் கைது செய்து வருகின்றனர். மேலும் அல் ஃபலா பல்கலைக் கழகத்திலும் சோதனை நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில் டெல்லியில் உள்ள இந்த பல்கலைக் கழகத்துடன்  தொடர்புடைய அறக்கட்டளைகள், அலுவலகங்கள், நபர்கள், நிறுவனங்களில் இன்று அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது.  ஓக்லா என்ற இடத்தில் இந்த பல்கலைக் கழக தலைமை அலுவலகம் உட்பட மொத்தம் இருபத்தைந்து இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. பல்கலைக் கழக தலைவர் ஜாவித் அஹ்மத் சித்திகி வீட்டில் சோதனை நடத்தி வரும் அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day