ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிப்பு : வங்கதேசத்தில் எதிர்ப்பு - மீண்டும் போராட்டம் வெடிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு வங்கதேசத்தில் வன்முறை வெடித்ததில் இருவர் உயிரிழந்தனர்.

வங்கதேச வன்முறையில் 1,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரத்தில், அப்போதைய பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா உள்ளிட்டோர் மீது மனித உரிமை மீறல் குற்றம் சுமத்தப்பட்டது. இந்நிலையில் வழக்கை விசாரித்த அந்நாட்டு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் நேற்று பரபரப்பு தீர்ப்பை அளித்திருந்தது. அதில் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து தீர்ப்புக்கு எதிராக ஷேக் ஹசீனாவின் ஆதரவாளர்கள், போராட்டத்தில் குதித்தனர்.

தலைநகர் டாக்காவில் ஒன்று திரண்ட அவாமி லீக் கட்சியினர் இடைக்கால அரசுக்கு எதிராக கோஷமிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து, போராட்டக்காரர்களை தடியடி நடத்தி விரட்டியடித்த போலீசார், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர கையெறி குண்டுகளையும் வீசியதால் அங்கு பதற்றமான சூழல் உருவாகியது. இந்த வன்முறையில் இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Night
Day