மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்கு - ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வங்கதேசத்தில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்கில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் கடந்தாண்டு ஏற்பட்ட மாணவர் போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த வன்முறையை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்ததால், வங்கதேசத்தை விட்டு வெளியேறிய அவர், இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.

இதைத்தொடர்ந்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது. புதிய அரசு அமைந்த உடன் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப் படுகொலை, ஊழல் செய்தது உள்பட ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 

கடந்த ஆகஸ்ட் மாதம் அரசின் இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக போராடுபவர்களை சுட்டுக் கொல்ல ஹசீனா உத்தரவிட்ட ஆடியோ வெளியானது. இதை ஆதாரமாக வைத்து ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சர், முன்னாள் போலீஸ் ஐ.ஜி. ஆகியோர் மீது மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக புதிய வழக்கை தீர்ப்பாயம் பதிந்து விசாரணை நடத்தி வந்தது. 

இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், ஷேக் ஹசீனாவை குற்றவாளி என அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் தீர்ப்பளித்து அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. மனித குலத்துக்கு எதிரான செயல்பாடுகளில் ஷேக் ஹசீனா ஈடுபட்டுள்ளார் என்பது நிரூபணமானதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

varient
Night
Day