நாய் குறுக்கே வந்ததால் விபத்து - பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே நாய் குறுக்கே வந்ததில் இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரை ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த வெங்கடசுப்பு என்பவர் தனது மனைவி பத்மாவதி என்பவருடன் இருசக்கர வாகனத்தில் அலங்காநல்லூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, சிக்கந்தர்சாவடி அருகே சென்ற போது திடீரென சாலையின் குறுக்கே நாய் ஒன்று வந்தபோது இருசக்கர வாகனத்தில் இருந்து தம்பதினர் நிலைதடுமாறி கீழே  விழுந்தனர். அப்போது, பின்னால் வந்து கொண்டிருந்த அரசுபேருந்து இருவர் மீது மோதியதில்,  கணவர் வெங்கடசுப்பு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த மனைவி பத்மாவதி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள் மற்றும் தெரு நாய்களால் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து தொடர்ந்து உயிர் சேதங்களும் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டி வருகின்றனர். எனவே, அரசு தீவிர கவனம் செலுத்தி தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. 

varient
Night
Day