சிப்காட் அமைக்க விளைநிலத்தை கையகப்படுத்தும் திமுக அரசுக்கு கண்டனம் - அன்புமணி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடலூர் மாவட்டத்தில் சிப்காட் அமைப்பதற்காக விளைநிலைங்கள் பறிப்பதை திமுக அரசு கைவிடாவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாக பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூரில் புதிய சிப்காட் வளாகத்தை உருவாக்க ஆயிரத்து 97 எக்கர் விளைநிலங்களை கையகப்படுத்த திமுக அரசு அரசாரணை வெளியிட்டிருப்பது விவசாயிகளையும், பொதுமக்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது என தெரிவித்துள்ளார். மக்களின் வாழ்வாதாரத்தை பறிப்பதுடன், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சிப்காட்டிற்காக நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை விளம்பர திமுக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும், இல்லாவிட்டால் கடலூர் மாவட்ட மக்களுக்காக தான் களமிறங்கி போராட்டம் நடத்தப்போவதாகவும் அன்புமணி தெரிவித்துள்ளார்.

Night
Day