நீலகிரி: வீட்டில் நுழைந்து வளர்ப்பு நாயை கவ்வி சென்ற சிறுத்தை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே வளர்ப்பு நாயை சிறுத்தை கவ்விச் சென்ற கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி உள்ளது. கோத்தகிரி நகரப் பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவது வாடிக்கையாகி உள்ளது. இந்த நிலையில் கோத்தகிரி நகர் க்ளப் ரோடு   பகுதியில் இரவு நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தை ஒன்று வளர்ப்பு நாயை கவ்வி சென்றுள்ளது. இது அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

varient
Night
Day