கோவையில் கல்லூரி மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை

எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை அருகே இரவு நேரத்தில் ஆண் நண்பருடன் பேசி கொண்டிருந்த கல்லூரி மாணவியை 3 இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து தப்பியோடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பகுதியில் இரவு நேரத்தில் காரில் ஆண் நண்பருடன் கல்லூரி மாணவி ஒருவர் தனியாக பேசி கொண்டிருந்திருக்கிறார். அவ்வழியாக வந்த 3 இளைஞர்கள், மாணவியின் ஆண் நண்பரை அடித்து தாக்கிவிட்டு மாணவியை தூக்கிச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து தப்பியோடி உள்ளனர். சம்பவம் குறித்து ஆண் நண்பர் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில், அங்கு வந்த போலீசார், ஆடைகள் கிழிக்கப்பட்டு, நிர்வாண கோலத்தில் இருந்த கல்லூரி மாணவியை மீட்டு தனியார் மருத்துவமனையிலும், ஆண் நண்பரை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சையில் சேர்த்துள்ளனர். சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள பீளமேடு போலீசார் 7 தனிப்படை அமைத்து தப்பியோடிய 3 இளைஞர்களை தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Night
Day