கிருஷ்ணகிரி: தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை தீர்த்து கட்டிய மனைவி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர். இருதாளம் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் நேற்று மாலை மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, சகோதரர் சீனிவாசன் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், உயிரிழந்த ஸ்ரீதரின் மனைவி சுமதிக்கும், கொத்தூரை சேர்ந்த பாலகுமார் என்பவருக்கும் தகாத உறவு இருந்ததும், இதற்கு ஸ்ரீதர் இடையூறாக இருந்ததால் அவரை கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து சுமதி, பாலகுமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். 

varient
Night
Day