உத்தரப்பிரதேசம்: இளம்பெண் அடித்து கொலை - கணவரும், மாமானரும் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரப்பிரதேசத்தில் வரதட்சணை கொடுக்காததால் இளம்பெண்ணை அடித்து கொன்ற கணவரையும், மாமனாரையும் போலீசார் கைது செய்தனர். கிரேட்டர் நொய்டாவில் உள்ள சௌகன்பூரை சேர்ந்த விகாஸ், கரிஷ்மா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அப்போது, 21 லட்சம் ரூபாய் ரொக்கமும், காரும் வரதட்சணையாக வாங்கிக் கொண்ட நிலையில், மேலும் வரதசட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி, மீண்டும் 10 லட்சம் வாங்கிக் கொண்டனர். மென்மேலும் வரதட்சணை கேட்டு கடந்த வெள்ளிக்கிழமை விகாஸும், அவரது அம்மாவும் கரிஷ்மாவை தாக்கிய நிலையில், அவர் சகோதரர் தீபகிற்கு செல்போனில் தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து தீபக் நேரில் சென்று பார்த்தபோது, கரிஷ்மா இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தீபக் அளித்த புகாரின் பேரில் விகாஸையும், அவரது தந்தையையும் கைது செய்த போலீசார், அவரது தாயையும், சகோதரியையும் தேடி வருகின்றனர். 

Night
Day