உச்சநீதிமன்றத்தில் பாபா ராம்தேவ் மற்றும் உதவியாளர் ஆஜர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பதஞ்சலி விளம்பரங்களில் தவறான தகவல்களை வெளியிட்டது தொடர்பான வழக்கில், அதன் நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் அவரது உதவியாளர் பாலகிருஷ்ணா உச்சநீதிமன்றத்தில் ஆஜராகினர். கடந்த நவம்பர் மாதம் பதஞ்சலி விளம்பரங்கள் தவறான தகவல்களை வெளியிடுவதாக இந்திய மருத்துவ சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, நீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸ்களுக்கு பதிலளிக்காத ராம்தேவ், கடந்த மாதம் நடைபெற்ற வழக்கில் பகிரங்க மன்னிப்பு கேட்டிருந்தார். ஆனால் அவரது மன்னிப்பை நிராகரித்த அமர்வு நீதிபதிகளான ஹிமா கோலி மற்றும் அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணாவை நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது. அதன்படி, ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். 

Night
Day