இயக்குநர் மணிகண்டன் வீட்டில் கொள்ளையடித்த தேசிய விருதுகளை திருப்பி கொடுத்த கொள்ளையர்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

இயக்குநர் மணிகண்டன் வீட்டில் திருடு போன தேசிய விருதுகளை கொள்ளையர்கள் மன்னிப்பு கடித்தத்துடன் திருப்பி வைத்துவிட்டு சென்றுள்ளனர். உசிலம்பட்டி எழில் நகரில் காக்கா முட்டை, கடைசி விவசாயி படங்களின் இயக்குநர் மணிகண்டன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 8ம் தேதி அவரது வீட்டின் பூட்டை உடைத்து பிரோவில் இருந்த 2 தேசிய விருதுக்கான வெள்ளி பதக்கங்கள், 1 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 5 சவரன் தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அவர் வீட்டு வாசலில் மன்னிப்பு கடிதத்துடன் தேசிய விருதுக்கான வெள்ளி பதக்கங்களை மட்டும் கொள்ளையர்கள் திருப்பி வைத்துவிட்டு சென்றுள்ளனர். 

varient
Night
Day