தங்கம் விலை ஒரேநாளில் ரூ.960 குறைந்தது

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரேநாளில் சவரனுக்கு 960 ரூபாய் குறைந்து 99 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை, இன்று காலை சவரன் 400 ரூபாய் குறைந்த நிலையில் மாலை மேலும் 560 ரூபாய் குறைந்தது. இதன்மூலம் ஒரே நாளில் சவரனுக்கு 960 ரூபாய் சரிந்து 99 ஆயிரத்து 840 ரூபாய்க்கும், கிராமுக்கு 120 ரூபாய் குறைந்து 12 ஆயிரத்து 480 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

தங்கத்திற்கு போட்டியாக உயர்ந்து வந்த வெள்ளியின் விலை ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் 257 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ஆயிரம் ரூபாய் சரிந்து 2 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கம் விலை, சற்று குறைந்து ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் வந்துள்ளதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Night
Day