புத்தாண்டு கொண்டாட்டம் - மெரினா, பட்டினப்பாக்கத்தில் போக்குவரத்துக்கு தடை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

2026 புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், இன்றும், நாளையும் பொதுமக்கள் கடலில் இறங்க தடை விதித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.

புத்தாண்டை பொதுமக்கள் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாட சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில், மாநகரம் முழுவதும் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உதவி ஆணையாளர்கள் தலைமையில் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை உட்பட மொத்தம் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.  

இதேபோல், சென்னை முழுவதும் 25 மேம்பாலங்கள் தற்காலிகமாக மூடப்படும் என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் இன்று இரவு 7 மணி முதல் மறுநாள் 6 மணி வரை போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பட்டாசுகள் வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. 

Night
Day