முதல்முறையாக ஹிந்தியில் ஐ.நா. பொதுச் செயலாளர் புத்தாண்டு வாழ்த்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரஸ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி முதல்முறையாக  ஹிந்தி, உருது உள்ளிட்ட மொழிகளுடன் வெளியிடப்பட்டுள்ளது.

ஆங்கிலம், அரபி, சீனம், பிரெஞ்ச், ரஷ்யன், ஸ்பானிஷ் ஆகிய அதிகாரப்பூர்வ மொழிகளுடன் தற்போது ஹிந்திக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி  ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரஸ் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், உலக நாடுகள் போர் மற்றும் அழிவுகளுக்கு செலவிடுவதை குறைத்து மக்கள் வளர்ச்சித் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த புத்தாண்டில் நாடுகள் சரியான முன்னுரிமைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் வறுமையை ஒழிக்கப் போராடுவதில் அதிகம் செலவழிக்க வேண்டும் என்றும் கூறியுள்ள அவர், நாடுகளுக்கு இடையேயான போர்கள் தவிர்க்கப்பட்டு அமைதி மட்டுமே நிலவ வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Night
Day