"இந்தியா - பாக். போரின் போது மத்தியஸ்தம் செய்தோம்" - புதிய சர்ச்சையைக் கிளப்பிய சீனா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்க அதிபர் டிரம்பை தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் போரின் போது மத்தியஸ்தம் செய்ததாக சீனாவும் தற்போது புதிய தகவலை வெளியிட்டுள்ளது. 

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வந்ததாக அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இந்த வரிசையில் தற்போது சீனாவும் இணைந்துள்ளது. பீஜிங்கில் நடைபெற்ற சர்வதேச நிலைமை மற்றும் சீன வெளியுறவுக் கொள்கை தொடர்பான கருத்தரங்கில் பேசிய வெளியுறவு அமைச்சர் வாங் யி, நீடித்த அமைதியை கட்டியெழுப்ப நியாயமான நிலைப்பாட்டை சீனா எடுத்துள்ளதாக கூறினார். இந்த அணுகுமுறையை பின்பற்றி, வடக்கு மியான்மர், ஈரான் அணுசக்தி பிரச்னை, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றம், பாலஸ்தீனம் - இஸ்ரேல் இடையேயான பிரச்னை, கம்போடியா - தாய்லாந்து மோதல்  ஆகியவற்றில் மத்தியஸ்தம் செய்ததாகவும் அவர் கூறினார். 

Night
Day