தீவு நாடான கிரிபாட்டியை தொடர்ந்து நியூசிலாந்தில் பிறந்தது 2026 புத்தாண்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

2026 புத்தாண்டை வரவேற்க உலகமே தயாராகி வரும் நிலையில், முதல்நாடாக கிரிபாட்டி தீவில் புத்தாண்டு பிறந்தது. இதனை அங்குள்ள மக்கள் உற்சாகமாக கொண்டாடி வரவேற்றனர்.

2025-ஆம் ஆண்டுக்கு விடைகொடுத்து, உலகிலேயே முதல்நாடாக கிரிபாட்டி தீவு புத்தாண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. பசிபிக் பெருங்கடலில் 33 தீவுக்கூட்டங்களை கொண்டுள்ள கிரிபாட்டி நாட்டின் 'கிறிஸ்துமஸ் தீவில்' இந்திய நேரப்படி இன்று மாலை 3.30 மணி அளவில் 2026 புத்தாண்டு பிறந்தது. மற்ற உலக நாடுகளுக்கு முன்னதாகவே கிரிபாட்டி மக்கள் கண்கவர் வாணவேடிக்கைகள், கொண்டாட்டங்களுடன் புத்தாண்டை வரவேற்றனர்.

தீவு நாடான கிரிபாட்டியை தொடர்ந்து, நியூசிலாந்தில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது. இதனை அங்குள்ள மக்கள் ஆட்டம், பாட்டத்துடன் உற்சாகமாக வரவேற்றனர். ஆக்லாந்து ஸ்கைடவரில் பிரமாண்ட கண்கவர் வாணவேடிக்கைகளுடன் கொண்டாட்டங்கள் களைக்கட்டின.

Night
Day