"பான்" கார்டுடன் ஆதார் எண் இணைப்புக்கு இன்றே கடைசி நாள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

பொதுமக்களின் நிதித் தரவுகளை முறைப்படுத்தும் விதமாக பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதை வருமான வரித்துறை கட்டாயமாக்கி உள்ளது. பலமுறை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இணைக்காதவர்கள், இன்றைக்குள் ஆயிரம் ரூபாய் தாமதக் கட்டணம் செலுத்தி பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதான் கடைசி வாய்ப்பு எனவும், இணைக்க தவறினால், பான் எண் செல்லாது என்று அறிவிக்கப்படும் எனவும் வருமான வரித்துறை எச்சரித்துள்ளது. ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாவிட்டால் பான் எண் செல்லாதது ஆக்கப்படும். இணைக்க தவறினால், வருமான வரி செலுத்துதல், பண பரிமாற்றம், வங்கி சேவை நிறுத்தம் ஆகியவற்றை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Night
Day