கரூர் துயரம் - தவெக நிர்வாகிகள் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் 3-வது நாளாக ஆஜர்

எழுத்தின் அளவு: அ+ அ-

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகளிடம் டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் தொடர்ந்து 3வது நாளாக இன்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி  41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக சம்மன் அனுப்பப்பட்டதன் அடிப்படையில் தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உள்ளிடோர் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு ஆஜராகினர். முதல் நாளில் 9 மணி நேரமும், நேற்று 7 மணி நேரமும் அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில், 3வது நாளாக இன்றும் தவெக நிர்வாகிகள் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜராகியுள்ளனர்.

Night
Day