விழுப்புரத்தில் முட்டை வாகனம் கவிழ்ந்து விபத்து

எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் அருகே முட்டை ஏற்றி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 ஆயிரம் முட்டைகள் உடைந்து சேதமடைந்தன.

கெடார் பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவர் நாமக்கல்லில் இருந்து முட்டைகளை கொள்முதல் செய்து சரக்கு வாகனத்தில் ஏற்றி கொண்டு விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அயினாம்பாளையம் அருகே முன்னால் சென்ற அரசு பேருந்தை முந்தி செல்ல முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தில் இருந்த இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்பிலான முட்டைகள் உடைந்து நாசமானது. இதனால் விழுப்புரம்-செஞ்சி இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Night
Day