வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த குழந்தை மீது மோதிய பைக்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவையில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த குழந்தை மீது அதிவேகமாக பைக் மோதிய விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளன. 

கரும்புக்கடை பகுதியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் அதிவேகமாக வந்த சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்த குழந்தை மீது பலமாக மோதி சிறிது தூரம் சென்று நிறுத்தினர். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்திய நிலையில் விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளன. 

Night
Day