மாநகராட்சியை கண்டித்து விலங்குகள் நல ஆர்வலர்கள் போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தெரு நாய்களை பிடிக்கும் சென்னை மாநகராட்சியை கண்டித்து உயர்நீதிமன்ற வாயில் அருகே விலங்குகள் நல ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சென்னை உயர்நீதிமன்ற வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தெரு நாய்கள் சாலைகளில் அதிக அளவில் சுற்றித் திரிவதுடன் அவ்வழியாக செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளை துரத்தி கடிப்பதால் அவற்றை பிடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, மாநகராட்சி ஊழியர்கள் தெரு நாய்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனையறிந்த விலங்குகள் நல ஆர்வலர்கள், உயர்நீதிமன்ற வாயில் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி நிர்வாகம் தெருநாய்களை பிடித்து காப்பகத்தில் ஒப்படைக்காமல் அதனை அடிப்பதாகவும், 150 க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Night
Day