காசி தமிழ்சங்கமம் 4.0 நிறைவு விழாவில் தமிழக ஆளுநர் பெருமிதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காசி தமிழ் சங்கமம் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பிரபலமாகி வருவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். காசி தமிழ்சங்கமம் திருவிழாவின் நிறைவுவிழா நேற்று நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றியபோது, 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய காசி தமிழ் சங்கமம் திருவிழாவால் தமிழ் மக்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பதாக கூறினார். காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையேயான இணைப்பு ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும் தெரிவித்தார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து தமிழகத்திற்கு வந்து தமிழை கற்பிப்பதாகவும் பெருமிதம் கொண்டார். தமிழ் மொழி பழமையான மொழி, சக்தி வாய்ந்த மொழி, மிக அழகான மொழி என தமிழுக்கு புகழாரம் சூட்டினார்.

Night
Day