ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த வசந்திக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சங்கருக்கும் திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், தன்னை கைவிட்டு பிரிந்து சென்ற கணவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்துள்ளார். அப்போது நுழைவுவாயிலில் வசந்தியின் பையை போலீசார் சோதனை செய்தபோது அதில் மண்ணெண்ணெய் இருந்தது தெரியவந்தது. போலீசார் அதனை கைப்பற்ற முயன்றபோது, வசந்தி உடனடியாக மண்ணெண்ணெயை தன்மீது ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். போலீசார் துரிதமாக செயல்பட்டு வசந்தியை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

Night
Day