பிரியாணி சாப்பிட்ட மேலும் 4 பேருக்கு உடல் உபாதை

எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் உணவகத்தில் உணவருந்திய 13 பேர் உடல் உபாதைகளால் அவதியடைந்துள்ளனர். 

பாவூர்சத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பிரியாணி கடையில் கடந்த சனிக்கிழமை அன்று பிரியாணி வாங்கி சாப்பிட்ட 9 பேருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் கடையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதேபோல், அதே உணவகத்தில் உணவருந்திய மேலும் 4 பேருக்கு உடல் உபாதைகள ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர்களும் சிகிச்சைக்காக  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, உணவின் தரம் குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Night
Day