எழுத்தின் அளவு: அ+ அ- அ
9 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 55 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, திருச்சி மாவட்ட ஆட்சியராக வெ.சரவணன், திருப்பூர் ஆட்சியராக நாரணவரே மனிஷ் ஷங்கர்ராவ், பெரம்பலூர் ஆட்சியராக அருண்ராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக சினேகா, மதுரை ஆட்சியராக பிரவீன் குமார், விருதுநகர் ஆட்சியராக சுபபுத்ரா, ஈரோடு ஆட்சியராக கந்தசாமி, நாமக்கல் ஆட்சியராக துர்கா மூர்த்தி, சிவகங்கை மாவட்ட ஆட்சியராக பொற்கொடி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோன்று, உயர் கல்வித்துறை செயலாளராக சங்கர், வணிகத்துறை செயலாளராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சமூக சீர்திருத்தத்துறை அரசு செயலாளராக முனைவர் வள்ளலார் நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு கூடுதல் ஆட்சியர் அர்ப்பித் ஜெயின் அம்மாவட்ட மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். போக்குவரத்துத்துறை அரசு சிறப்பு செயலாளராக ஆர்.லில்லி மற்றும் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவன மேலாண்மை இயக்குநராக விஜயராணியை நியமனம் செய்து தமிழக தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.