அஜித் விவகாரத்தில் பேரம் பேசியதை எதிர்த்து வழக்கு

எழுத்தின் அளவு: அ+ அ-

மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் லாக்கப் சம்பவத்தில், கட்டப்பஞ்சாயத்து செய்த அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நாளை விசாரணை நடத்த உள்ளது.

இதுதொடர்பான மனுவில் திருப்புவனம் காவல்துறையுடன் இணைந்து, அப்பகுதியைச் சேர்ந்த பிரமுகர்கள் சிலர், பிரச்சினை செய்யாமல் அஜித் குமாரின் உடலை பெற்றுக்கொள்ளுமாறு குடும்பத்தினருக்கு அழுத்தம் கொடுத்ததாகக் குறிப்பிடப்பட்டது. மேலும் அவர்கள் பண பேரத்திலும் ஈடுபட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய அரசியல் பிரமுகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மனித உரிமைக்கு எதிரான சட்டவிரோத காவல் மரணங்களை தடுக்க உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பிறப்பிக்க வேண்டும் உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு, அஜித்குமார் மரண விவகாரம் தொடர்பான வழக்குகள் நாளைக்கு விசாரணைக்கு வரும் நிலையில், அவற்றோடு சேர்த்து இந்த வழக்கையும் பட்டியலிட உத்தரவிட்டுள்ளனர்.

Night
Day