மரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற மனுதாரர்

எழுத்தின் அளவு: அ+ அ-

நிலப்பிரச்சனை தொடர்பாக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து ராமநாதபுரம் ஆட்சியரகத்தில் உள்ள மரத்தின் மீது ஏறி பாதிக்கப்பட்டவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் குறைதீர்   கூட்டத்திற்கு வந்த தொண்டியை சேர்ந்த தர்மமராஜ் என்பவர் நிலபிரச்சனையை தீர்த்து கோரி  வைக்கோரி பல முறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனை தெரிவித்தார். இதனையடுதது, அதிகாரிகள் மீது இருந்த விரக்தியில் ஆட்சியரகத்தில் உள்ள வேப்ப மரத்தில் ஏறி பாதிக்கப்பட்டவர் தற்கொலைக்கு முயன்றார். பின்னர் காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி தர்மராஜை கீழே இறக்க வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Night
Day