முன்விரோதத்தால் இளைஞர் வெட்டிக்கொலை

எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இளைஞரை முன் விரோதம் காணரமாக 10 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொரப்பள்ளி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த வெங்கட்ராஜ் என்பவரும் வெங்கடேஷ் என்பவரும் முன்விரோதம் இருந்து வந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் வெங்கடேஷ் இருசக்கர வாகனத்தில் வெங்கட்ராஜ் வீட்டு வழியாக வேகமாக வேகமாக சென்றதாக தெரிகிறது. அப்போது வெங்கட்ராஜ் வழிமறித்து தட்டி கேட்ட போது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் வெங்கடேஷை வெங்கட்ராஜ் தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த வெங்கடேஷ், நவீன் ரெட்டி, உள்ளிட்ட 10 பேருடன் சேர்ந்து வெங்கட்ராஜை பயங்கர ஆயுதங்களுடன் வெட்டி கொலை செய்தனர். இதையடுத்து வெங்கடேஷ், நவீன் ரெட்டி உள்ளிட்ட 4 பேர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். தலைமறைவாக இருக்கும் மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

Night
Day