வெளிநாடுகளுடனான பரஸ்பர வரி விதிப்பு விவகாரம் - நீதிமன்றத்துக்கு எந்த பங்கும் இல்லை - வெள்ளை மாளிகை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வெளிநாடுகளுடனான பரஸ்பர வரி விதிப்பு விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு எந்த 
பங்கும் இல்லை என்று அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை விமர்சித்துள்ளது.

இது குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட் பேசியபோது, 
மற்ற நாடுகளுடனான வர்த்தக வரி உள்ளிட்டவை அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கை என்று குறிப்பிட்டார். இது போன்ற அரசு நடவடிக்கையில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்றும், இந்த வரி விதிப்பு விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு எந்த பங்கும் இல்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார். இந்த விவகாரத்தில் சமரசத்துக்கு ஒருபோதும் இடமில்லை என்றும் கரோலின் லெவிட் தெரிவித்தார்.

Night
Day