வர்த்தக நீதிமன்ற தடை - தற்காலிகமாக நீக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அதிபர் ட்ரம்ப் விதித்த பல்வேறு நாடுகள் மீதான பரஸ்பர வரிவிதிப்புக்கான வர்த்தக  நீதிமன்ற தடையை தற்காலிகமாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் நீக்கி உள்ளது. 

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த பல்வேறு நாடுகள் மீதான பரஸ்பர  வரிவிதிப்பு நடவடிக்கைக்கு அமெரிக்காவின் வர்த்தக நீதிமன்றம் தடை விதித்தது. இதனை எதிர்த்து ட்ரம்ப் நிர்வாகம் சார்பில் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பல்வேறு நாடுகளுக்கான அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரிவிதிப்பு முறைக்கு தடை விதிக்கக் கூடாது என்றும், வரிச்சலுகை தருவதாகக் கூறி இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியதாக ட்ரம்ப் நிர்வாகம் கூறியது. இதனை இந்தியா மறுத்துள்ளது. இதனிடையே, அதிபர் ட்ரம்பின் வரி விதிப்பு முறையை தற்காலிகமாக தொடர அந்நாட்டு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. வணிக நீதிமன்றம் விதித்த தடையை நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

Night
Day