கேரள செவிலியர் நிமிஷாவின் தூக்கு தண்டனை ரத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஏமன் அரசு ரத்து செய்தது. 

கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா. இவர், கடந்த 2008ம் ஆண்டு ஏமனுக்கு வேலைக்கு சென்றார். ஏமன் நாட்டைச் சேர்ந்த தலோல் அப்டோ மஹ்தி என்பவருடன் சேர்ந்து நிமிஷா பிரியா சொந்தமாக கிளினிக் தொடங்கி நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் முழுமையாக கிளினிக்கை அபகரிக்க மஹ்தி முற்பட்டதால் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் மஹ்திக்கு மயக்க மருந்து செலுத்தி அவரை கொன்று விட்டதாக நிமிஷா பிரியா மீது குற்றம் சாட்டப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த ஏமன் நீதிமன்றம் நிமிஷாவுக்கு தூக்கு தண்டனை விதித்து, கடந்த 16ம் தேதி தண்டனை நிறைவேற்றப்பட இருந்த சூழலில் இந்திய அரசின் தலையீட்டால் தண்டனை ஒத்தி வைக்கப்பட்டது. 

இதனையடுத்து சன்னி முஸ்லிம் தலைவர் காந்தபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியார் மூலம் அங்குள்ள பிரபல சூஃபி மதகுருவு ஷேக் ஹபீப் உமர் உதவியுடன் உயிரிழந்த மஹ்தி குடும்பத்தினரிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. 

இதனடிப்படையில் ஏமன் நாட்டின் உயர்மட்டக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டு, அறிவிக்கப்பட்டது.

Night
Day