இந்தியா மீதான புதிய வரி விதிப்பு... ஒரு வாரத்திற்கு ஒத்திவைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விதிக்கப்பட்டு இன்று அமலுக்கு வரவிருந்த புதிய வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒத்தி வைத்துள்ளார். 

70க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 10 சதவீதம் முதல் 41 சதவீதம் வரை திருத்தப்பட்ட புதிய வரிகளை விதிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று கையெழுத்திட்டார். அதில், அதிகபட்சமாக சிரியாவுக்கு 41 சதவீதமும், குறைந்தபட்சமாக பிரேசில், பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு 10 சதவீத வரிகளும் விதிக்கப்பட்டது. இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு 19 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விதிப்பு இன்று அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வரும் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்ட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் வரிவிதிக்கப்பட்ட நாடுகளுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி புதிய ஒப்பந்தங்களை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Night
Day