ராணுவச்சட்டத்தால் மியான்மரை விட்டு வெளிநாடுகளுக்‍கு செல்ல ​ஆயிரக்‍கணக்‍கானோர் விண்ணப்பம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் அனைவரும் 2 ஆண்டுகளுக்‍கு ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்ற சட்டம் பிறப்பிக்‍கப்பட்டதை அடுத்து ஆயிரக்‍கணக்‍கானோர் நாட்டை விட்டு ​வெ​ளியேற விரும்புகின்றனர். மியான்மரில் ஏற்படும் கலவரங்களை அடக்‍க வசதியாக 18 வயது முதல் 35 வயதாகும் ஆண்கள் மற்றும்  18 முதல் 27 வரையாகும் பெண்கள் 2 ஆண்டுகள் கட்டாயம் ராணுவத்தில் பணிபுரிய வேண்டும் என்று கடந்த வாரம் அந்நாட்டு ராணுவம்  உத்தரவிட்டது. இதையடுத்து மியான்மரை சேர்ந்த ஆயிரக்‍கணக்‍கான இளைஞர்கள் தலைநகர் யாங்கூனில் உள்ள சாலைகளில் நீண்ட வரிசைகளில் காத்திருக்‍கின்றனர். மியான்மரை விட்டு வெளிநாடுகளுக்‍கு செல்ல விரும்பி விசா கோரி விண்ணப்பித்து வருகின்றனர். நாள் ஒன்றுக்‍கு 400 பேர் விசா பெறுவதாக தெ​ரியவந்துள்ளது.

Night
Day