துருக்கி தலைநகர் இஸ்தான்புல் இரவு விடுதியில் தீ விபத்து - 29 பேர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

துருக்கியின் மத்திய இஸ்தான்புல் நகரில் இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 29 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மத்திய இஸ்தான்புல் நகரில் அமைந்துள்ள Masqu erade இரவு விடுதியில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து, அவசர மருத்துவ உதவிக் குழுவினர் விடுதிக்குள் நுழைந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டனர்.  இருப்பினும், தீ விபத்தில் 29 பேர் உயிரிழந்தனர். தீ விபத்து தொடர்பாக இரவு விடுதி மேலாளர், ஊழியர்கள் என 6 பேர் கைதாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Night
Day