தேர்தலுக்காக கச்சத்தீவு பிரச்சனையை பேசவில்லை - நிர்மலா சீதாராமன் பேட்டி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கச்சத்தீவு விவகாரம் இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் தேர்தல் காலங்கள் உட்பட எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் பேசலாம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிர்மலா சீதாராமனிடம், கச்சத்தீவு விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, கச்சத்தீவை ஒரு பொருட்டாகவே முன்னாள் பிரதமர்கள் நேருவும், இந்திரா காந்தியும் கருதவில்லை என கூறினார். ஒரு நாட்டின் பாதுகாப்பு விஷயத்தையம், இறையாண்மை சம்பந்தப்பட்ட விஷயத்தையம் தேர்தலுக்காகத்தான் பேச வேண்டும் என்பதில்லை, எப்போது வேண்டுமானாலும் பேசலாம் என்றும் அது நமது உரிமை எனவும் கூறினார். 

கச்சத்தீவு தொடர்பாக 50 ஆண்டுகளாக உண்மைக்கு புறம்பான வகையில் திமுக-காங்கிரசால் பிரசாரம் செய்யப்பட்டு வருவதாக குற்றம்சாட்டிய நிர்மலா சீதாராமன், தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் அப்போதும்,  இப்போதும் கூட்டணி வைத்துள்ளதை சுட்டிக்காட்டினார். தமிழக மக்களுக்கு விரோதமான செயல்களை காங்கிரஸ் கட்சி செய்யும்போது தி.மு.க. அமைதியாகவே இருந்ததாகவும் அவர் சாடினார். தேர்தல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கச்சத்தீவு பற்றிய உண்மை தமிழக மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக தான் ஆர்டிஐ மூலம் இந்த தகவல் பெறப்பட்டு திமுக-காங்கிரஸ் கட்சிகள் மக்களுக்கு செய்து வரும் துரோகத்தை பாஜக வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

Night
Day