ஒவ்வொரு பகுதியிலிருந்தும் காங்கிரசை அகற்ற வேண்டும் : பிரதமர் மோடி பேச்சு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியாவை பலவீனமான நிலைக்கு தள்ள காங்கிரஸ் முயற்சிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

வரும் மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் நாடு எரிந்து விடும் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேசியதற்கு, பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக எதிர்வினையாற்றினார். உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூரில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பேசிய பிரதமர் மோடி, ஆட்சியில் இருந்து விலகியதால் காங்கிரஸ் அவநம்பிக்கை அடைந்துள்ளதாகவும், நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் காங்கிரசை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார். எமர்ஜென்சி மனப்பான்மையுடன் காங்கிரசுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை எனவும், தேர்தல் ஆணையத்துக்கு எதிராக மக்களைத் தூண்டிவிடுவதில் அரச குடும்பமான காங்கிரஸ் மும்முரமாக உள்ளதாக சாடினார். 

varient
Night
Day