பிறந்தது 2026 - களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

2025 ஆம் ஆண்டு முடிவடைந்து புத்தாண்டாக 2026 பிறந்ததை நாடு முழுவதும் மக்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி வரவேற்றனர்.

2025 ஆம் ஆண்டு விடைபெற்று 2026 ஆம் ஆண்டு தொடங்கியதை வரவேற்கும் விதமாக பல்வேறு இடங்களில் மக்கள் பட்டாசு வெடித்து, கேக் வெட்டி கொண்டாடினர். சிறியோர் முதல் பெரியோர் என அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடி, புத்தாண்டு இனிதாக வரவேற்கப்பட்டது. மேலும், வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டன. நகரின் முக்கிய பகுதிகளில் மக்கள் ஒன்றுகூடி, ஆடிப்பாடி, இனிப்புகள் வழங்கியும் புத்தாண்டை வரவேற்றனர். 

நாட்டின் பல பகுதிகளில் கலை நிகழ்ச்சிகளும் களைகட்டின. வானத்தை வாண வேடிக்கைகளால் வர்ணம் பூசியும் மகிழ்ந்தனர். இதனிடையே, அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

Night
Day